சதக் சதக்....
இங்கு இருந்து தப்பிபேன்னு தெரியல, ஏனா நான் அவ்வளவு சித்ரவதை செய்யப்பட்டு இருக்கேன்... நா இன்னும் அர மயக்கத்துல தான் இருக்கேன்... ஆனா என்ன கட்டிபோட்டு இருக்கறத மட்டும் என்னால உணர முடியுது...
நடக்கபோரத நினைக்கும் போது Heart beat மணிக்கு 72க்கு பதிலா 720 தடவ துடிக்குது...
எல்லோரையும் போல நானும் சந்தோசமா தான் இருந்தேன், ஆனா ஏன் திடிர்னு இப்டி ஆஹிடேன், ஒரு வேலை அவனுங்க என்னை கொன்று வாங்களோ....?
ஹம்..... நன்றி மறந்தவணுக ... இவனுங்களுக்காக எவ்வளவு கச்டபட்டுருபேன், விசுவாசம் என்ற வார்தையோட எல்லைவரை உழைத்து இருப்பேன், இன்னும் சொல்லனும்னா என்னை கொள்ள நினைக்குற இவனுங்களுக்காக, யாருமே இளிவா நினைக்குற விபச்சாரம் கூட பண்ணிட்டேன்.....
சதக்...சதக்....
சதக்...சதக்.... ஆ..... அம்மா....( அலறல் சப்தம்...)
ஆமா அது என்னோட நண்பனோட குரல் தான்... அடப்பாவிகளா, துரோகிகளா, எறும்புக்கு கூட துரோகம் நினைக்காத அவனை போய் கொன்னுடிங்கலேடா
பச்சை துரோகம், நம்பிக்கை துரோகம், பட்டியல உங்க பெயர தாண்ட முதல எழுதனும்.
அந்த ரத்த வாட என்னோட மயக்கத்த தெளிய வச்சது, அநேகமா அவங்களுட அடுத்த குறி நான் தான்...yes இப்போ அவன் அந்த ரத்த கர கொண்ட கத்தியோட என்ன நோக்கி தான் வர்றான், நா தப்பிபேனு எனக்கு தெரியல ஏன்னா அதுக்கான நம்பிக்கையும் தெம்பும் எண்ட இப்போ இல்ல...
இந்த நேரத்துல நான் கடவுள் கிட்ட என்னோட கடைசி ஆசைய சொல்லனும்னு நினைக்குறேன்...
இறைவா,
அடுத்த பிறப்பிலாவது என்னை கரி கோழியாக அல்லாமல்
ஒரு காட்டுக் கோழியாக படைச்சுடு...
ஏன்னா, மறுபடியும் என்னால இந்த நன்றி கெட்ட மனுஷங்களோட வாழ... sorry - சாக முடியாது....
சதக்...சதக்....
கடைகாரர்: அண்ணே இந்தாங்க நீங்க கிட்ட 1/2 kg கோழி கறி......

