Saturday, September 25, 2010

பாட்டி "விட்ட" கதை...

"The Hindu" - Science and Technology ல ஒரு சுவாரசியமான செய்தி, என் பாட்டி நான் சின்னபில்லையா இருந்த காலத்துல ( அப்ப நா ஜட்டி கூட போடாத வயசு ) சொன்ன கதை தான் டப்ன்னு flash backla வந்தது....


ஆனா அதுக்கு முன்னாடி அந்த news என்னனா....


மாடுகளோட cerebrum ல (brain) biochip ஒன்ன, vocal cardla (தொண்டை ) connect பண்ணி.... 
(சு......)
simple லா சொல்லனும்னா அம்மான்னு சொல்லிக்டு இருக்கிற மாடுங்க எல்லாம் மாதாஜி, மம்மி, அப்டி இப்டின்னு அதுங்க நேனைகிரத பேசமுடியும்...


But ஒரு small technical error ஏற்பட்டதால அந்த project இப்ப அந்தரத்துல பப்பரபானு கேடபுல கெடக்குது...


இனி flashback.....


flashbackku முன்னாடி எங்க பாட்டிய பத்தி ஒரு சின்ன builduppu...
கத சொல்லறதுல எங்க பாட்டி ஒரு stephen speilberg + நம்ம வுரு - ராம நாராயணனோட கலவை..

பாட்டி "விட்ட" கதை.....

அப்ப tv, ரேடியோ, எதுவுமே time passuku இல்லாத நேரம் (1990's) - எங்கலுக்கு இருக்கிற ஒரே entertainent எங்க பாட்டிகிட்ட கத கேக்குறது மட்டும்தான்... 

சாரதாமணி  பாட்டி : அந்த காலத்துல நல்லா வாழ்ந்த குடும்பம் - பெரியசாமியோட குடும்பம். தோப்பு, கரும்பு காடு, வயல், வாசல், இப்டி ஒரு குட்டி கிராமமே அவருக்கு சொந்தம். ஆனா அவரோட கேட்ட நேரம் - தொழிலில் ஏற்பட்ட இழப்பு, அவரை நடுதெருவுக்கு கொண்டு வந்தது.. 

எல்லாம் அவரை விட்டு சென்றபின்பும் ஒரே ஒரு விசுவாசி - சுந்தரம் மட்டும் அவர்கலுகு வுரு துணையாக இருந்தான்...

அப்பறம் ஒரு நாள் பெரியசாமி சுந்தரத்திடம் : 
சுந்தரம் உன்னோட நல்லதுக்கு தான் சொல்லறேன் நீ வேற எங்காவது போய் போலசுகோ, ஏன்னா என்னாலையும் உனக்கு சம்பளம் கொடுக்க முடியாது - நீயும் எவ்வளவு நாள் தான் எங்கலுக்காக கஷ்டபடுற , போதும்பா...

சுந்தரத்தாளையும் அதுக்கு மேலயும் அங்கு இருக்க முடியாதுகரத தெரிஞ்சுகிட்டு வெளி வுருக்கு வேலைக்கு சென்றுட்டான்......             

Cross talk :
அம்மா : டேய் home work பண்ணிடிங்களா,
பாட்டி : எல்லாம் பண்ணிட்டாங்க மா....
அம்மா : (சற்றும் பாட்டியை சட்டை செய்யாமல் ) சரி கத கேட்டது போதும்  வாங்க சாப்டலாம்....
பாட்டி : நீங்க சாப்டு வந்தாதான் பாட்டி கத சொல்லுவேன் (இவ்வாறு சொல்ல மனதில்லாமல் சொன்னால் )
(Mind voice il நான் :
 இறைவா எங்கம்மாவுக்காவது அவளை மதிக்கும் மருமகள் வரட்டும்பா )  

சர சரனு சாப்டு கத கேக்க வந்தோம், பாட்டி சாபிடால என்ற ஆர்வம் சிறுதும் இன்றி.. 

பாட்டி கதையை தொடர்ந்தாள் :
பெரியசாமியின் குடும்பம் நிலை ரொம்பவும் கச்டமாகிடுச்சு..... ஒரு வேல saapaattukku    கூட இல்லாத நிலை....
சுந்தரம் கஷ்ட பட்டு நல்ல நிலைக்கு வந்துட்டான் ரொம்ப சீகிரமே.....

நன்றி கடனாய் பெரியசாமியை பாக்க வந்த சுந்தரத்துக்கு ரொம்பவே வேதனையா இருந்துச்சு அவங்களோட அந்த நிலைமை பார்த்து....
தன் கண்முன்னே தனக்கு சம்பளம் கொடுத்த முதலாளி இன்று 5/- சம்பள தின கூலி தொழிலாளி...

தன்னால் ஆனா பொருளுதவியை அவங்கலுக்கு கொடுத்துட்டு -  பிரியமனமில்லாமல் கிளம்பினான்... ரொம்ப களைப்பா இருந்ததால ஒரு மரத்தடியில் ஓய்வெடுத்தான்....

Beyond the science - matters:  இனிமேல் தான் " பாட்டி 'விட்ட' கதைகே நாம பிரயாணம் பன்னபோரோம்.......

அதே மரத்துல, அந்த பக்கமா ரெண்டு மாடு இருந்துச்சு...
அதுங்க பேசுச்சு - ஆமா அத கொஞ்சம் கூட சுந்தரம் எதிர்பார்கவே இல்ல... இருந்தாலும் தூங்கிக்கிட்டு அதுங்க பேசுறத கவனிக்க ஆரம்பிச்சான்.....

brown மாடு :
ஒரு மனுஷனுக்கு கஷ்டம் வரலாம் ஆனா பெரியசாமி குடும்பத்துக்கு வந்த மாதிரி   கஷ்டம் வரகூடாது... 
white மாடு :   இதுக்கெல்லாம் காரணம் அவங்க தான் brown அண்ணே....
brown மாடு : என்ன white தம்பி சொல்றிங்க, ஒன்னும் புரியலேயே...
white மாடு : ஒவ்வொரு நாளும் சிவனும், பார்வதியும் தான் எல்லாருக்கும் படி அளப்பார்கள் - அதுவும் ஒருவருக்கு எவ்வளவு தேவையோ அத மட்டு தான் அளபாங்க...
இந்த பெரியசமியோட குடும்பம் மட்டும் கேடைகரத மிச்சம் பண்ணி பண்ணி வைகிரதால அவங்க குடும்பத்துக்கு படி அளகிரதே இல்லையாம்...
whiteடும்  brownnum வேற கதை பேச ஆரம்பிச்சுருச்சு ஆனா இத எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருந்த நம்ம சுந்தரம் உசார் ஆகிடான்....

விறு விறுனு பெரியசமியோட வீட்டுக்கு போனான்... இருக்கிற சட்டி பாத்திரத்துல இருந்த  சாப்பாட்ட காலிபண்ண முதலாளிகே உத்தரவிட்டான்...
வேற வழி தெரியாம அவங்களும் அவன் பேச்சை கேட்டு அப்டியே செஞ்சாங்க..

அடுத்தநாளே, 10/- சம்பளத்துக்கு அழைப்பு வந்தது பெரியசாமிக்கு.... அன்று இரவே எல்லா ரூபாய்க்கும் அரிசி பருப்பு வாங்கி அப்பணத்தை காலி பண்ண சொன்னான் சுந்தரம்... 
சுந்தரம்: ஏன் எதுக்குன்னு கேள்வி மட்டும் கேட்காதிங்க எல்லாம் உங்க நல்லதுகுக்காக தான் செய்யுறேன்...
பெரியசாமியும் நல்லது நடந்தால் சரிதான்னு எல்லாத்துக்கும் சம்மதித்தார்.....

அடுத்தநாள்,
20/-  சம்பளத்துக்கு அழைப்பு வந்தது பெரியசாமிக்கு.... அன்றிரவும் சுந்தரம் கூறியவாரே பெரியசாமியின் பெரிய குடும்பம் அனைத்தையும் காலி செய்தது...

சிவன் மேலும் ௫௦50/- அடுத்த நாள் படி அளந்தார் ...
50/- 100/- ஆனது அவர்களும் சளைக்காமல் வுண்டு பெருத்துக்கொண்டே போயினர்...
ஒரு கட்டத்தில் பூமா தேவிகே இவர்களின் பாரம் தாளாமல் சிவனிடம் முறை இட்டால்.... பார்வதி தேவிக்கு புரிந்தது இதல்லாம் இந்த brownnum whitum பேசிய speechaal தான் என்று...

அன்று முதல் மாடுகள் என்றும் அம்மா என்ற வார்த்தையை தவிர 
வேறு வார்த்தைகள் பேசாதவாறு சிவனும் பார்வதியும்  அவைகளுக்கு வாய்க்கட்டு போட்டு விட்டனர் .... 

பின்னாளில் பெரியசாமியும் நல்லதொரு நிலைமைக்கு மீண்டு விட்டார்....

Back to 2010 thu, The Hindu - Science & technology.... 
 டேய் வெள்ளக்காரன்களா நீங்க எவள்ளவு முக்குனாலும்  மாட்ட பேசவைக்க முடியாதுடி, அதெல்லாம் அந்த ஈசன் கையில் தான் இருக்கு...  

அரே ஓ சம்போ...

   
            


      
    
     


3 comments:

 1. Muthal rasigan:
  pesama patti vitta kathaya nee pathiyilayae vittu irukkalaam... iruntaalum ivvalavu lengthu blogukku agaathu... but kadasila nee sollavantatha sollitaenu oru mana thirupthi irukkumnu nenaiku raen aana athukaaka ipdi padikira yellathaiyum toonga vachutiyae paa...

  Better luck next time...

  ReplyDelete
 2. i liked reading this da .. good relation to hindu and your paati , good narration but spelling mistake ekkachakkama SS music VJ madiri iruku. edavadu pannunga thambi. padikum bodhu manasu kashtapadudhu

  ReplyDelete
 3. istappatta ungala kastappada vaithatharkaaka mannikkavum... inni oru muraiyum ithu pondra tavaru nadakkaadu...

  ReplyDelete

Translate to Ur Mother Tounge

What Are These? | Blog Translate Gadget