Sunday, March 4, 2012

சித்தம்.......

                                                                    
                             சித்தம்.......   இன்று


இதுவரை:

வரதன் ஒரு இலக்கியவாதி, அரசு கல்லூரியில் பணிபுரியும் ஒரு புதுமை விரும்பி....

குணா – தனியார் தொலைகாட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி. எதையும் எதிர்கொள்ளும் துணிவுகொண்டவள்.....

FACEBOOK என்னும் வடிகால் வழியாக குணாவை சந்திக்க விதிக்கப்பட்டான் வரதன்...

விதிக்கப்பட்ட இடம் : ஆவின் தேநீர் கடை, ஆரபாளையம் – மதுரை.

இனி:

இருவரும் தங்கள் வேலை முடிவுற்ற பின்பு எந்த ஒரு புற அங்கங்களுக்கும் செயற்கை சேர்க்காமல் மெய் புன்னகையை மட்டும் பரிமாறிக் கொண்டனர் அந்த முதல் சந்திப்பில்.....

சொல்லுங்க வரதன் ஏதோ முக்கியமான விஷயம் சொல்லணும்னு கூப்டிங்க... Sorry no formalities, ஒரு hai கூடசொல்லாம இப்டி straightடா matter open பண்ணுறேனு தப்பா நினைக்க வேணாம், இதுதான் என்னோட style….
கொஞ்சம் அதிக பிரசங்கிதனமா பேசுறேனு நினைக்காதீங்க.... 

உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு.என்னதான் நான் இலக்கியம் படித்தவன்னாலும், என்னால மெய் பேசுற உங்க கண் கிட்ட பொய் பேசுற கவிதய சொல்ல முடியல...

 எனக்கு இந்த Coffee shop, Pizza hut, இங்கலாம் கூட்டிட்டு போய் உங்கள பத்திதெரிஞ்சுக்கண்ணும்னு துளி கூட ஆசை இல்ல... 
பயபடாதீங்க....பார்த்த உடனேயே கல்யாணம் பண்ணிக்கோனு கேக்குற அரகுற ஆல் இல்ல நான்... ஆனா உங்கள miss பண்ணிட கூடாதுன்னு மனசு சொல்லுது. உங்களுக்கு சம்மதம்னா நாம பழகிப்பார்க்கலாம்னு தோணுது.....

        இரண்டு வினாடி மௌனதிற்கு பின்பு ஏற்றிய புருவத்தை இறக்கினாள் குணா. எல்லாம் சரி..... எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான்.....
நமக்கு செட் ஆகலேனா இனிமேல் நாம சந்திச்சுகவே வேண்டாம். ஆனா, ஒரு வேலை நமக்கு பிடிச்சுபோய், அதுவும் கல்யாணம் வரை போனால், நா பாக்குற வேலய வீட்டுட சொல்லுவியா நீ....  

“யார் ஒருத்தன் பிடுச்ச வேலைய செய்யுறானோ அவன் வாழ்க்கை நிம்மதியா இருக்கும்.. எவன் ஒருவனுக்கு பிடிச்ச வேலைய அவன் மனைவி செய்கிறாளோ அவங்க வாழ்க்கை அழகாக இருக்கும்...” எனக்கு உங்களோட profession ரொம்ப பிடிச்சு இருக்கு குணா. 

ம்ம்.......கவித.... கவித...... Please தயவு செய்து வாங்க போங்கணு சொல்லி பேசாத.... நீ அப்டி பேசுறது, என்னயும் அப்டி பேச சொல்லி indirectடா order போடுற மாதிரி இருக்கு... and I am not convenient with that…..
I used to be unpredicted, and i love to follow that……. So, நாம பழகுறதுக்கும் அப்டி ஒரு விஷயம் இருந்தா நல்லா இருக்கும்னு தோணுது. எனக்கும் இந்த Coffee shop, Pizza hut இதுல எல்லாம் உடன்பாடே இல்ல.......

வரதன் வேணும்னா இப்டி பண்ணலாம்..... நாளை மறுநாள் ஒரு program இருக்கு... அதுவே நமக்கான களமாக கூட அமையலாம்... தயவு செய்து என்னணு கேட்காத சுவாரசியமே இல்லாம போயிடும்........

சரிங்க அம்மணி அப்டியே செய்யுறேன்.... என்று கூறிய வரதனை பார்வையால் வதம் செய்து விடைபெற்று சென்றாள் குணா..   

        


அன்று

சுமார்8 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு.....

               
           சிலோன், இந்திய திருநாட்டின் ஒரு அங்கமாக இருந்தநேரம்.. நாகேந்திரவர்மன் என்னும் சிற்றரசன் தென்கரை கொண்ட பாண்டியன் என்ற பேரரசனின் துணை கொண்டு சிலோனை ஆண்டு வந்தான்.
நாகேந்திரவர்மணின் குலதெய்வம் நாகபூசணி அம்மன், ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நாகபூசணி அம்மன் நாக பஞ்சமி அன்று சற்ப உருவில் வந்து மாணிக்க கல் ஒன்றை வெளிப்படுத்துவாள்.... அப்போது அந்த கல்லில் இருந்து வெளிவரும் ஒளி படும் இடம் எல்லாம் உயிர் சக்தி ஊட்டப்படும், எதிர் வரும் எதிரியும் நட்பு பாராட்டி செல்லும் வல்லமை கொண்டது அவ்வொளி. சக்தி வாய்ந்த அக்கல்லை அம்மனுக்கு சமமாக வணங்கி வந்தனர் அம்மக்கள்.

            
 
அந்த மாணிக்க கற்களை பாதுகாக்க தென்கரை கொண்ட பாண்டியன், விசுவாசமிக்க ஒரு குடும்பத்தையே நியமித்திருந்தான் – அவர்களை “நாகா” என்று அழைத்தனர். அவற்றை கவர வரும்யாவரும் குறுகிய காலங்களில் துற்மரணத்தையே எதிர் கொண்டனர்.
காலங்கள் கடந்தோடின.... நாகா வம்சத்தினர், கவசமென காத்து வந்தனர் மாணிக்க கற்களை......

ஏறத்தாள 20,000 ஆண்டுகளுக்கு முன்னர் நீரில் மூழ்கியது சிலோன் (எஞ்சி இருந்தது இன்றைய இலங்கை மட்டுமே.....), மூழ்குவதற்கு சில காலங்களுக்கு  முன்னர், நாக பூசணி அம்மனின் ஆணையின் படி நாகா வம்சத்தின் கடை வாரிசு சுந்தரநாக வரதன் மாணிக்க கற்கள் அடங்கிய பொக்கிஷ பெட்டியுடன் மதுரையை அடுத்த வள்ளிபுரம் சென்றான். வழி எங்கிலும் சற்பங்கள் காவலாய் துணையாய் வந்தன......

அதே பொழுதில் மதுரையை ஆர்ய படைகள் முற்றுகையிட்ட நேரம்........
அன்றிரவு மதுரையை ஆண்ட உக்கிர பாண்டியனின் கனவில்.... தென்னாவரத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கும் ஆலயத்தில் அரசன் கொண்ட குழப்பத்திற்க்கு விடை உண்டுஎன்று அசரீரு ஒலிக்க கேட்டான்.....    
        
தென்னாவரம், மதுரையில் இருந்து மேற்கே 40 மைல் தொலைவில் உள்ளது... அங்குள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தான் எந்த ஒரு முக்கிய பிரச்சனைக்கும் அரசன் ஈஸ்வரனின் துணை கொண்டு குறி கேட்டு, முடிவெடுப்பான்.


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு வாசல் உட்புறம் நீண்ட தூண் ஒன்று உள்ளது அதுதான் தென்னாவரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு செல்ல வேண்டிய ரகசிய வழியின் நுழைவாயில்....
 மதுரையில் இருந்து தென்னாவரம் செல்லும் வழியில் இருப்பதே வள்ளிபுரம்...........

     


இன்று    – நாக பஞ்சமி.......  
  
சற்றும் வரதன் எதிர்பார்க்கவில்லை, குணா FZ பைக்கை ஓட்டி வருவாள் என்று.. இருப்பினும் தான் கொண்ட ஆச்சர்யத்தை வெளிக்காட்டாமல் அவளிடம் கேட்டான், அப்பறம் நாம எங்க போகபோறோம்....
தெரியல....இந்த பைக்குல தோறாயமா  1.5 litre Petrol இருக்கும்போல.... வண்டி எங்க நிக்குதோ அந்த இடத்தில் இன்னைக்கு நாம evening spend பண்ணுவோம்…. அப்புறம்....

கொஞ்சம்பொறு மிச்சத்தை நான் சொல்லுறேன்..... அப்புறம் அப்டியே காலாரா நடந்து petrol வாங்கிக்கிட்டு return வரணும், அந்த நேரத்துல interestinga பேசிட்டு வரணும், அவ்வளவு தானா குணா.......

எனக்கென்னமோ நமக்குள்ள set ஆகிடும்னு தோணுது...... வரதன் இந்தா வண்டியை நீ ஓட்டு......

ஐயையோ எனக்கு Gear வண்டியெல்லாம் ஓட்டத் தெரியாது பா.... அப்போது அவள் முகத்தில் வந்தசந்தோசத்திற்கு காரணம் - தான் கூறிய பொய் என்பதில் சற்றும் கர்வம் கொல்லாதவனாய், அவளை ரசித்தவாறு அவளிடம் வண்டியை ஓட்ட கூறிவிட்டு பின்னிருக்கையில்அமர்ந்தான் வரதன்.....
Full stop வைக்கமுடியாமல்,                                                            etc., வாக தொடர்ந்து கொண்டிருக்கிறது......                                                       இவள்மீது நான் கொண்ட காதல்....”                     
     இத இவட்ட சொன்னா என்ன செய்வா..... என்றுயோசனை செய்து கொண்டு இருக்கையில்....... ½ மணி நேர பயணம் முடிவுற்று இருந்தது - 

நக்கலபட்டி என்றொரு ஊர் வந்தது..........

வரதனின் கவனத்தை வெகுவாக திசை திருப்பியது அவர்களை கடந்து சென்ற இளம் பெண்களின் கூட்டம். வண்டியின் கண்ணாடியில் வரதனின் அசைவுகள் அனைத்தையும் கவனித்தவாறு வந்தாள் குணா...

என்ன வரதன் site கூட வரும் போதே site அடிக்கிறாப்டி போல.....

சே சே.....
“பிறர்மனை நோக்கின் சதுக்க பூதத்தால் புடைத்துண்ணப் படுவர்”

ஐயாஇலக்கிய வரதா..... என்ன தான் சொல்ல வரீர்....

அங்க போன பெண்கள் எல்லாரும் புதுசா கல்யாணம் ஆனவங்க.... பிறர் மனைவிய தப்பா பாத்தோம்னா சதுக்க பூதத்தாளா கடிச்சு திண்ணப் படுவோம்.

விளக்கம் எல்லாம் சரிதான், ஆனா அவங்க எல்லாம் கல்யாண மாணவங்கணு எப்டி சொல்லுற, any guess…..

அவங்க கழுத்துல மஞ்ச கயிறு புதுசா இருக்கு, கை நிறைய வளயல் போட்டுகிட்டு இருக்காங்க, அதுக்கும்மேல அவங்க முகத்தில ஒரு பூரிப்பு தெரியுது.....

ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்‌ம்.... பயங்கறம்.....  சரி அவங்க எல்லாரும் எங்க போறாங்கணு guess பண்ணி சொல்ல முடியுமா.......

Guess எதுக்கு exactடாவே சொல்லுறேன் கேட்டுக்கோ, 
இவங்க எல்லாம் வள்ளிபுரத்தில இருக்குற நாகபூசணி அம்மன் கோவிலுக்கு போய்டு வராங்க, இன்னைக்கு “நாக பஞ்சமி” அதாவது ஆவணி மாசத்தோட பௌர்ணமி முடிஞ்சு 5வது நாள், இந்த நாளில் புதுசா கல்யாணமாண பொண்ணுங்க அவங்க பொறந்த வீட்டு ஆண்களுக்காக நாக தெய்வத்துக்கு வழிபாடு பண்ணிட்டு அங்க மந்திருச்ச கயிற வீட்டில இருக்குற அண்ணன், தம்பிக்கு எல்லாருக்கும் கட்டி விடுவாங்க. சுருக்கமா சொன்னா இன்னைக்கு தான் இவங்களோட ரக்சா பந்தன்....

அது என்ன “நாக பஞ்சமி” அந்த Particular நாள்ல பாம்புங்க ஏதாவது ஸ்பெஷல் effect பன்னுமா என்ன....?


நாகமணி பண்ணுமாம்.....   
சத்யமா அத நான் பார்த்தது இல்ல. ஆனா அதப்பத்தி சில facts எல்லாம் சொல்ல முடியும் குணா.
ஒருபாம்பு சாராசரியா 18 அடி உயரம் வளரும் தன்மை கொண்டது, அதுக்கு கோவம் வரும் பட்சத்தில 6 அடிவரை எளுந்து நிற்குமாம். அதாவது நமது நெத்திப் பொட்டினை அது நிமிர்ந்து நின்று நேருக்கு நேர் பார்க்கும் வல்லமை கொண்டது. நாகமணியை, யாரையும் தீண்டாத தனது விஷம் கொண்டு உருவாக்குது பாம்புகள். நாகமணியோட ஒளியின் வெளிச்சத்திலதான் பாம்புகள் இறைதேடுது, அப்ப யாராவது அந்த நாகமணிய அபகரிக்க நெனைச்சா அதுங்க 100 km வேகத்துல பறந்து தாக்குமாம்.     

அடேங்கப்பா இந்த மாதிரி விசயத்துக்கு உண்ண வைச்சே ஒரு WIKIPEDIA போடலாம் போலயே வரதா... சரி சரி நீ அப்டியே கதய continue பண்ணு, அப்ப தான் என்னால bore இல்லாம வண்டி ஓட்டமுடியும்.....
சரியா வரதன் கதசொல்லி முடிக்க, வண்டியில petrol தீந்து போனது. அவங்க வந்து சேர்ந்த இடம், வள்ளிபுரம்.........
             


அன்று,                     .           
   
   வள்ளிபுறம், மலைகளும் மரக்கூட்டங்களும் அடற்ந்த காட்டுப் பகுதியாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ரகசிய வழியையும் தென்னாவரம் சுந்தரேஸ்வரர் கோவில் ரகசிய வழியையும் இணைக்கும் மையபகுதியாக அமைய பெற்ற இடம் வள்ளிபுரத்தில் உள்ள நாக பூசணி அம்மன் கோவில். மலைகளின் நடுவே அக்கோவில் உள்ளது. கோவிலின் கருவறையில் புத்து ஒன்று உள்ளது, அதன் பின் புறத்தில் மிகப் பெரிய துவாரம் ஒன்றின் வழியாகவே ரகசிய பாதைகள் இணைக்கப்படுகிறது.

அந்த புத்தில் பதினெட்டு அடியில் இருக்கும் சக்தி வாய்ந்த நாக பூசணி அம்மன், நாகா வம்சத்து சுந்தரநாக வரதனையும், அவன் கொண்டு வந்த பொக்கிசத்தையும் பாதுகாத்து வந்தாள்.
ஈசனின் ஆணைப்படி அரசன் தென்னாவரம் சென்று கொண்டிருந்தான். அது வரை வள்ளிபுரம் நாக பொக்கிஷம் பற்றிய செய்தி அறியாத அரசன், அன்று தனக்கு காணக்கிடைத்த காட்சியின் மூலம் தான்கொண்ட மனக்குழப்பத்திற்கு விடை கண்டான். ஆம் நாக பூசணியே அவனுக்கு காட்சி கொடுத்தாள், அது மட்டுமின்றி, சற்ப படைகளை அவனுக்களித்து நாக மாணிக்கத்தையும் பரிசளித்தாள். .


இன்று

ஏனோ வள்ளிபுரத்தின் பேரே குணாவையும், வராதனையும் ஒருசேர ஈர்த்தது. தாங்கள் இங்கு வந்த நோக்கமில்லா நோக்கத்தையும் மறந்து வள்ளிபுரத்தின் மலைமுகடுகளை நோக்கி, காந்தத்தால் ஈர்க்கப்பட்ட இரும்பைப்போல் மௌனமாக இருவரும் விரைந்தனர். முன்னேற முன்னேற வரதனின் கால்கள் தளரத் துவங்கின, மெல்ல மெல்ல அவன் கண்கள் சொருகத் தொடங்கின. பேச வார்த்தை இருந்தும் வாயடைத்த பேதையாய் வராதனை பின் தொடர்ந்தாள் குணா.

ஒரு கட்டத்தில் குணா அதிர்ச்சியில் உறைந்து போனாள்,

உஷ்ஷ்ஷ்.......உஷ்ஷ்ஷ்....... உஷ்ஷ்ஷ்....... என்ற சீற்றத்துடன் பாம்பை போல் ஊர்ந்து செல்லதுடங்கினான் வரதன்.
குணா செய்வதறியாது அழத்துடங்கினாள், இன்னும் வேகம் கொண்ட வரதன் ஊர்ந்தவாரே மலை மேல் உள்ள நாக பூசணி அம்மன் கோவிலுக்கு வந்தடைந்தான்......         

வந்துடியா......வா...... வா...... என்றது அங்கோலித்த மர்ம குரல்...... 

அன்று

அம்மனின் அருளும், ஈசனின் ஆசியும் கொண்ட உக்கிர பாண்டியன் போரில் புதிய யுக்தியை சற்ப படைகள் கொண்டு கையாண்டான். மேலும் நாக மாணிக்கத்தின் ஒளி ஆர்ய படைகளை சரணடைய செய்தது.
வெற்றியைகொண்டாடும் முன் உக்கிர பாண்டியனின் மனதில் சஞ்சலங்கள் ஏற்பட்டது. ஏனெனில் அம்மாணிக்கதின் சக்தியே வெற்றியின் வழிகால், அதனால் யாரும் இந்த நாகமாணிக்கத்தை எளிதில் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதை எண்ணி கலக்கம் கொண்டான்.


100க்கும் மேற்பட்ட மாணிக்கங்களை கருட பச்செலை மூலம் பொடிகளாக்கி கருத்தாமணக்கு இலை மற்றும்பசுவின் சாணத்தின் உதவி கொண்டு அதன் ஒளியை உள்ளடக்கி, யானை தந்தத்தால் ஆனாபெட்டி ஒன்றில் அவற்றை நிறப்பி நாக பூசணி அம்மனின் புற்றில் கிடத்தி விட்டான்.
இந்த பொக்கிசத்தையும், அதன் ரகசியத்தையும் காக்கும் பொறுப்பை சுந்தரநாக வரதனிடம் ஒப்படைத்துவிட்டு அங்கு வருவதர்க்காண ரகசிய வழிகளை அடைத்து விட்டான். அவற்றை அடைக்கும் முன்னர், அந்த பாதை யாவும் தங்கத்தால் பூசப்பட்டு அதில் கல்வெட்டாய் நடந்து முடிந்த வரலாற்றையும் எதிர்காலத்தின் சித்தத்தையும் வடித்துவைத்தான் சித்தம் கண்ட உக்கிர பாண்டியன்.


இன்று

 இன்னைக்கு நாக பஞ்சமினு சொன்னான், ஆனா இவன் நாகம் மாதிரி ஆவன்னு சொல்லலியே... உடைந்து போன தைரியத்தை, தட்டி கொடுத்து, வரதனை பயம் கலந்த ஆர்வத்துடன் பின் தொடர்ந்தாள் குணா....
கோவிலின் உள்ளே,


                                களிநாகன்  
                             
நாகா உன் வேலை வந்து விட்டது...... இந்த மர்மமான குரலுக்கு சொந்தமானவர், நாகா வம்சத்தின் வாரிசு, வரதனின் முன்னோர்களில் ஒருவர் களிநாகன். 100 ஆண்டுகளுக்கு பின் இன்று நாகபூசணி பொக்கிஷம் தரும் நாள், இனிமேலும் இந்த பொக்கிசங்கள் இங்கு இருக்ககூடாது என்பது அம்மனின் கட்டளை. அவற்றை இடம் பெயர செய்வது உன்பொறுப்பு.

வரதன்தான் கொண்ட கோலமறியாது, களிநாகனின் வார்த்தைகளில் அடங்கி தலையசைத்தான். அப்போது நாகபூசணி அப்புற்றில் இருந்து வெளி வரத்துவங்கினாள், நடப்பதை கண்டு அஞ்சி வியர்க்க துவங்கியது குணாவுக்கு சற்று நேரத்தில் மயங்கி விழுந்தாள்........

நாகபஞ்சமி முடிந்து அடுத்த நாள்.............

கை, கால்கள், உடம்பு முழுக்க ரத்தப்பிடிப்பு மாதிரி இருந்தது குணாவுக்கு...... நேற்று நடந்தது என்ன? இன்று நான் எப்படி என் வீற்றிக்கு வந்தேன்? இந்த வரதனுடைய வரலாறு தான் என்ன ? இப்போ நாகமணி கற்கள் எங்க இருக்கு?

இப்படி பல கேள்விகள் அவள் தலையில் சுழல, விடை தேட வரதனின் mobileளுக்கு முயற்சி செய்தாள். Mobile not reachable என்று வந்தது.

I Like to be unpredictable, but this is too much…… இருந்தாலும் I want to explore it, இப்போ வரதன் மட்டும் கைள கெடச்சான்....... என்று என்னும் போதே வரதனிடம் இருந்து call வந்து கொண்டு இருந்தது....... 

ஆர்வம் கலந்த பயத்துடன் தான் தாங்கி நிற்கும் கேள்விகளுக்கான விடைக்காண CallAttend செய்தாள் குணா....    

       

                                      ----------- சித்தம் தொடரும்.........  


பகுதி 2ஐ படிக்க click செய்யவும்